RER : நேர சூசியில் முன்னேற்றம்!!

21 மாசி 2025 வெள்ளி 16:17 | பார்வைகள் : 1831
RER தொடருந்து சேவைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த RER சேவைகளில் நெருக்கடியான சேவைகளான B, C மற்றும் D வழிச் சேவைகளில் முன்னேற்றம் இல்லை எனவும், ஏனைய சேவைகள் நேரசூசியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 96.18% சதவீதமான சேவைகள் துல்லியமான நேரத்தில் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
RER C மற்றும் D ஆகிய சேவைகள் 86% சதவீத நேர சூசியில் இயங்குவதாகவும், அனைத்து சேவைகளுக்கும் பின்னால் RER B சேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.