கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
21 மாசி 2025 வெள்ளி 16:57 | பார்வைகள் : 3480
கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற போது, கிரேன்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan