Paristamil Navigation Paristamil advert login

நாளை ஆரம்பமாகிறது Salon de l'agriculture!! (நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியவை)

நாளை ஆரம்பமாகிறது Salon de l'agriculture!! (நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியவை)

21 மாசி 2025 வெள்ளி 18:10 | பார்வைகள் : 2003


நாளை ஜனவரி 22, சனிக்கிழமை சர்வதேச விவசாயக் கண்காட்சி (Salon de l'agriculture) ஆரம்பமாக உள்ளது. இந்த கண்காட்சி தொடர்பில் நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களை தொகுக்கிறது இந்த செய்தி.

61 ஆவது ஆண்டாக இந்த நிகழ்வு இவ்வருடம் இடம்பெறுகிறது.

பெப்ரவரி 22 முதல் மார்ச் 2 ஆம் திகதி வரையான ஒன்பது நாட்கள் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி இடம்பெறும்.

6 தொடக்கம் 12 வயதுடைய சிறுவர்களுக்கு €9 யூரோக்களும், அதற்கு மேலுள்ளவர்களுக்கு €16 யூரோக்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு €11 யூரோக்களும்,  ஆறு வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சிட்டைகளை உத்தியோகபூர்வ இணையத்தளம் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

1,000 வரையான கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் எனவும், 600,000 பார்வையாளர்கள் வருகைதரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் Paris expo Porte de Versailles மைதானத்தில் கண்காட்சிகள் இடம்பெற உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்