வெள்ளம், புயல்.. 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

21 மாசி 2025 வெள்ளி 18:56 | பார்வைகள் : 1036
நாளை பெப்ரவரி 22, சனிக்கிழமை வெள்ளம், புயல் போன்ற அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo-France அறிவித்துள்ளது.
Aisne, Ardèche, Gard, Hérault, Oise மற்றும் Somme ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Isère, Rhône, Loire, Puy-de-Dôme, Haute-Loire, Ardèche, Aveyron, Tarn, Haute-Garonne, Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய மாவட்டங்களுக்கு புயல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.