என்னை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; ஷிண்டே ! அரசியலில் பரபரப்பு

22 மாசி 2025 சனி 05:04 | பார்வைகள் : 209
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அழைப்பு விடுத்த, கூட்டங்களை தவிர்த்து வரும் ஏக்நாத் ஷிண்டே, '2022ம் ஆண்டில் என்னை எளிதாக எடுத்து கொண்டபோது ஆட்சியை கவிழ்த்தேன்' என தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது, ஷிண்டே முதல்வராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட, ரூ.900 கோடி மதிப்பிலான திட்டத்தை முதல்வர் பட்னவிஸ் நிறுத்தி வைத்துள்ளார்.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அழைப்பு விடுத்த, கூட்டங்களை, ஏக்நாத் ஷிண்டே தவிர்த்து வருகிறார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே பிரச்னை நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: நான் ஒரு சாதாரண கட்சித் தொண்டன். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 2022ல் என்னை எளிதாக எடுத்துக் கொண்டபோது நான் ஆட்சியை கவிழ்த்தேன்', என்றார். 2022ம் ஆண்டில், 40 எம்எல்ஏக்களுடன் ஷிண்டே பா.ஜ.,வுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து முதல்வர் ஆனார்.