காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஆயுததாரி பலி!!

22 மாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 903
ஆயுததாரி ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். வடமேற்கு பகுதியான Noyal-sur-Vilaine (Ille-et-Vilaine) எனும் நகர்ப்பகுதி அருகே இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 21, நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் rue Maurice-Ravel வீதியில் நபர் ஒருவர் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு பெண் ஒருவரை மிரட்டியுள்ளார். அப்பெண்ணுடன் அவரின் 3, 4 மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளும் இருந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. ஆயுததாரி கத்தியை கைவிடுமாறு பணிக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை மறுத்ததோடு, அப்பெண்ணை தாக்கவும் முற்பட்டார். அதை அடுத்து, காவல்துறையினர் ஆயுததாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.