Paristamil Navigation Paristamil advert login

Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!! - நேற்றைய தொடர்ச்சி!!

Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!! - நேற்றைய தொடர்ச்சி!!

20 புரட்டாசி 2017 புதன் 10:39 | பார்வைகள் : 18496


Kanak இன மக்களிடம் தோன்றியிருந்த இந்த Front de Libération Nationale Kanak et Socialiste, (FLNKS) அமைப்பு, பிரெஞ்சு தங்களை ஆள்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
இந்த குழு 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. குழுவின் தலைவர் Victor Tutugoro. இந்த குழு சில நாசகார வேலைகளில் ஈடுபட்டது. குறிப்பாக அதிகாரிகளை தாக்குவது.. ஆர்ப்பாட்டம்.. ஆங்காங்கு வன்முறை.. சிலபல துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வெறியாட்டங்களை ஆடிக்கொண்டிருந்தது. 
 
இந்த வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக, சில இராணுவத்தினரை பிரெஞ்சு அரசு Nouvelle-Calédonieக்கு அனுப்பி வைத்தது. அதன் பின்னர் சில வன்முறைகால் தடுக்கப்பட்டது. 
 
இப்படி இருக்கும் போது, 1988 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் திகதி காலை, மிக மோசமானதாக விடிந்தது. Nouvelle-Calédonie தீவில் நான்கு ஜோந்தாம் வீரர்கள் FLNKS இனால் கொல்லப்பட்டனர்.  பின்னர் 27 ஜோந்தாமினர்கள், அரச வழக்கறிஞர், GIGN படையில் இருந்து ஏழு அங்கத்தவர்களை குறித்த FLNKS படையினர் ஆயுத முனையில் அதிரடியாக கடத்திக்கொண்டு... ஒரு சிறிய கப்பலில் ஏறி, Ouvéa தீவுக்குச் சென்றடைந்தனர். 
 
Ouvéa தீவு, ஒரு புளியம்பழம் போன்ற வடிவில் இருக்கும் குட்டி தீவு. 132 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட ஒரு தீவு. Nouvelle-Calédonieக்கு சில நூறு கிலோமீட்டர்களில் இந்த தீவு அமைந்துள்ளது. 
 
'பிரெஞ்சு அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். பிரான்சிடம் இருந்து Nouvelle-Calédonieக்கு விடுதலை வேண்டும். இல்லையேல் இவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்!' என கடத்தியவர்கள் அறிக்கை விட்டனர். 
 
கடத்திய கும்பலின் தலைவர் பெயர் Victor. பிரெஞ்சு அரசு இந்த 'டிமாண்ட்'ஐ காதில் போட்டுக்கொள்ளாமல்  Opération Victor எனும் ஒரு மிஷனை GIGN படையினருக்கு வழங்கியது..
 
கடத்தல்காரர்களை அழித்து.. பணயக்கைதிகளை மீட்க GIGN களம் இறங்கியது..!!
 
வேட்டை தொடரும்...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்