பெரும் இலாபமீட்டியுள்ள பிரெஞ்சு மின்சாரசபை!!

22 மாசி 2025 சனி 06:50 | பார்வைகள் : 1186
பிரெஞ்சு மின்சாரசபை (EDF) சென்ற 2024 ஆம் ஆண்டில் பெரும் இலாபமீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 காலத்தில் பிரெஞ்சு மின்சாரத்துறை இழப்புக்களைச் சந்தித்திருந்த நிலையில், சென்ற 2024 ஆம் ஆண்டு €11.4 பில்லியன் யூரோக்கள் இலாபமீட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக 10 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது.
அதேவேளை, சென்ற ஆண்டில் மொத்தமாக 520 terawatt hours (TWh) மின்சாரத்தை மின்சாரவாரியம் உற்பத்தி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் 361.7 TWh மின்சாரம் அணுமின் நிலையங்களூடாக உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.