அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

22 மாசி 2025 சனி 08:23 | பார்வைகள் : 289
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே நேற்று மாலை சிலர் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் பரபரப்பை நேற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.