2025 Kia Seltos 3 புதிய வகைகளுடன் 24 டிரிம்களில் அறிமுகம்

22 மாசி 2025 சனி 09:39 | பார்வைகள் : 195
புதுப்பிக்கப்பட்ட 2025 Kia Seltos மூன்று புதிய வகைகளுடன் 24 டிரிம்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
KIA India நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யூவி Seltos 2025-ன் புதிய வகைகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், நிறுவனம் அதன் மிட்-சைட் எஸ்யூவியின் முழு வரிசையையும் புதுப்பித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட 2025 Seltos 8 புதிய வகைகளைப் பெறுகிறது. புதிய வேரியண்ட்டுடன், Seltos இப்போது 24 டிரிம்களில் கிடைக்கும்.
நிறுவனம் HTE (O), HTK and HTK (O) ஆகிய 3 feature-loaded வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அனைத்து வகைகளிலும் புதிய அம்சங்களும் கிடைக்கும்.
Seltos 2025-ன் அடிப்படை மாடலின் விலை ரூ.11.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). செல்டோஸின் டாப்-ஸ்பெக் X-Line விலை ரூ.20,50,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
புதுப்பிக்கப்பட்ட செல்டோஸின் பவர்டிரெயினில் எந்த மாற்றங்களும் இல்லை. இது முன்பு இருந்த அதே 1.5-litre petrol எஞ்சினைப் பெறுகிறது, இது 6-speed manual அல்லது CVT உடன் வருகிறது.
1.5-litre turbo-petrol எஞ்சினும் உள்ளது, இது 6-speed iMT அல்லது 7-speed DCT உடன் வருகிறது.
இது தவிர, புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ் 1.5-litre diesel எஞ்சின் விருப்பத்தையும் பெறுகிறது, இது 6-speed iMT அல்லது 6-speed automatic உடன் வருகிறது.
கியா செல்டோஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17-20.7 கிமீ ஆகும். அதாவது எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து மாறுபடும்.