உலகின் மிக அசாதாரண இயற்கை அதிசயங்கள் நிறைந்த நாடு எது….?

22 மாசி 2025 சனி 10:36 | பார்வைகள் : 495
உலகின் மிக அசாதாரண இயற்கை அதிசயங்களில் ஒன்றை அனுபவிக்க விரும்புவோருக்கு இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும்.
சொகோட்ரா தீவுக்கூட்டம் (Socotra archipelago) இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளின் தொகுப்பாகும்.
இது பூமியின் மிகவும் தனித்துவமான மற்றும் பல்லுயிர் இடங்களில் ஒன்றாகும்.
விசித்திரமான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற சோகோட்ராவில் வேறு எங்கும் காண முடியாத தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளது. இதன் அரிய சுற்றுச்சூழல் அமைப்பு காரணமாக "Galapagos of the Indian Ocean" என்று அழைக்கப்படுகிறது.
சொகோட்ரா என்பது யேமனின் ஒரு பகுதியாகும். இது சொகோட்ரா, அப்துல் குரி, சம்ஹா மற்றும் தர்சா ஆகிய நான்கு முக்கிய தீவுகளைக் கொண்டுள்ளது.
இவற்றில் மிகப் பெரியது, சொகோட்ரா ஆகும்.
இது, மலைகள், சுண்ணாம்பு பீடபூமிகள் மற்றும் பரந்த கடலோர சமவெளிகளைக் கொண்ட அற்புதமான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது.
இந்த தீவு உண்மையிலேயே தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், சொகோட்ரா 2008 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.
அறிக்கைகளின்படி, இந்த தீவின் தாவர வகைகளில் 37%, ஊர்வனவற்றில் 90% மற்றும் நில நத்தைகளில் 95% பூமியில் வேறு எங்கும் இல்லை.
சொகோட்ராவின் மிகவும் பிரபலமான தாவரங்களில் ஒன்று டிராகன் குருதி மரம் (Dragon Blood tree). இது குடை வடிவத்தில் காணப்படும். இந்த மரங்களில் சில, 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.
இதில் இருந்து பல நூற்றாண்டுகளாக மருந்து மற்றும் சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிவப்பு பிசின் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மற்ற அரிய தாவரங்களில் சோகோட்ரா பாலைவன ரோஜாவும் அடங்கும். இதில் தண்ணீரை சேமிக்கும் தடிமனான தண்டு கொண்டது.
தீவுகளைச் சுற்றியுள்ள நீரில் மீன், நண்டுகள் மற்றும் கடல் ஆமைகள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளன.
இங்கு, அல்-மஹ்ரா பழங்குடியினத்தைச் சேர்ந்த பழங்குடியினருடன் சுமார் 60,000 மக்கள் வாழ்கின்றனர். மற்றவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் யேமன் நிலப்பரப்பில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இயற்கையை நம்பியுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உலகின் மிக அசாதாரணமான இயற்கை அதிசயங்களில் ஒன்றை அனுபவிக்க விரும்புவோருக்கு சொகோட்ரா ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைந்துள்ளது.