Paristamil Navigation Paristamil advert login

Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!!

Opération Victor - GIGN படையினரின் அதிரடி சாகசம்!!

18 புரட்டாசி 2017 திங்கள் 15:30 | பார்வைகள் : 18949


GIGN  படையினர் பிரான்சின் தலைசிறந்த இராணுவ வீரர்கள் என்பது நீங்கள் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் போது பயங்கரவாதிகளை துரத்தி துரத்தி வேட்டையாடியது அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.
 
மிக சிக்கலான பணிகளை மாத்திரமே மேற்கொள்ளும் இந்த வீரர்களின், மிக முக்கியமான ஒரு ஒப்பரேஷன் தான் இந்த 'Opération Victor' பிரெஞ்சு புதினத்தில் இது குறித்து அறிந்துகொள்வோம். அதற்கு முன்னர் சில வரலாறுகளை அறிந்துகொள்ளவேண்டியுள்ளது. 
 
பிரான்சுக்கு எத்தனையோ கடல் கடந்த இடங்கள், தீவுகள் உள்ளன. உலக வரைபடத்தில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் Nouvelle-Calédonie எனும் தீவை உங்களால் பார்க்க முடியும். பிரான்சின் கிழக்கு பக்கமாக 16,136 கிலோமீட்டர்கள் கடலில் பயணம் செய்தால், பசிஃபிக் பெருங்கடலில் கூட்டமாக சில தீவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் Nouvelle-Calédonie தீவு!! 
 
பிரெஞ்சு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தீவு என்றாலும்... பிரெஞ்சு மொழியைத் தவிர மொத்தம் 39 மொழிகள் இங்கு வசிக்கும் மக்கள் பேசுகின்றனர். இரண்டரை இலட்சம் மக்கள் வசிக்கும் ஒரு தீவு. இங்கிருந்து தான் கதை ஆரம்பிக்கிறது. 
 
பிரெஞ்சு கட்டுப்பாட்டுக்குள் மிக நன்றாகவே ஆட்சி நடந்து வந்தாலும்... பல போராட்டக் குழுக்கள் இதற்கு எதிராக கொடி பிடித்தனர். பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டும். Nouvelle-Calédonie தீவு யார் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்காமல் தனி நாடாக சுந்தந்திரமாக இருக்க வேண்டும் என சில குழுக்கள்  முரண்டு பிடித்தனர்.
 
இந்த தீவில் வசிக்கும் மக்களில் Kanak (முன்னதாக பிரெஞ்சில் Canaque என எழுதப்பட்டு... பின்னர் Kanak என மாறியது) இன மக்கள் 40.3 வீதம் வசிக்கின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர். இந்த இன மக்கள் தான் பிரெஞ்சு அரசின் மேல் மிகப்பெரும் வைரியாக இருந்தார்கள். ஆங்காங்கே சில ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள்.. அரச அதிகாரிகளை தாக்குவது என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். 
 
இந்த இன மக்களிடம் ஒரு குழு இருந்தது. Front de Libération Nationale Kanak et Socialiste, (FLNKS) அதாவது கனாக் தேசிய விடுதலை முன்னணி என அவர்கள் தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டனர். 
 
 
GIGN படையினரின் சாகசம் நாளை...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்