பிரான்சில் பெருகும் சிக்குன்குனியா!!! ஒரு மாதத்திற்குள் 1000 பேரிற்குத் தொற்று!!

22 மாசி 2025 சனி 11:14 | பார்வைகள் : 745
பிரான்சின் தீவக மாநிலமான ரியூனியன் தீவில் (île de la Réunion) மிகவும் நுளம்புகளால் மிகவும் மோசகமாக சிக்குன்குனியா (chikungunya) பல்லாயிரக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது.
டைகர் ரக நுளம்பினால் (moustique tigre) ஒரு மாதத்திற்குள் மட்டும் புதிதாக 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள 24 பிரந்தியங்களில் 19 பிராந்தியங்கள் முற்றாக இந்நோயினால் பாதிப்படைந்துள்ளது. அதிகமான பேர் பாதிப்படைவதால் பலரிற்கு உயிராபத்தும் ஏற்படுவதாக மாவட்ட ஆணையகம் தெரிவித்துள்ளது.
இங்கு 2005-2006 காலப்பகுதிக்குள் 260.000 பேர் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.