உணவு ஆயுதமாக மாறக்கூடும் - எமானுவல் மக்ரோன்!

22 மாசி 2025 சனி 12:07 | பார்வைகள் : 1309
«நாளை உணவே ஒரு ஆயுதமாக மாறக்கூடும்» என்பதை மறுப்பதற்கில்லை என பரிசின் விவசாயக் கண்காட்சியில் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று விசாயக் கணகாட்சியினை எமானுவல் மக்ரோன் திறந்து வைத்திருந்தார். இதன்போதே மேற்கண்ட கருத்தை எமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
«குறிப்பாக விவசாய உலகத்தினால் உணவு பல நாடுகளிற்கு ஆயுமதாக மாறக்கூடும். கடந்த ஆண்டு நெருக்கடி மற்றும் பதற்றம் நிறைந்த காலமாக இருந்தது. குறிப்பாக விவசாயிகளிற்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது»
என்று தெரிவித்த எமானுவல் மக்ரோன் விவசாயிகளிற்கு எதிரான கருத்தையும் தெரிவித்தார். அவர்கள் போராட்டங்களை மறுதலித்தும் இருந்தார்.
«இங்கு உணவுக் கொள்ளைகளையோ விசாய ஒப்பந்தங்களையோ விவசாயிகள் முடிவு செய்ய முடியாது. ஐரோப்பிய ஒப்பந்தங்களை நாம் பின்பற்றவேண்டும். நாம் புவிசார் பொருளாதாரத்தின் காலத்தில் உள்ளோம். இங்கும் உணவை ஆயுதமாக மாற்றி போராட்டங்கள் நடந்துள்ளது. இது முறையானது அல்ல. நாளை பிரெஞ்சு உற்பத்தியை ஊக்குவிக்க ஆவன செய்வோம்»
எனவும் தெரிவித்திருந்தார்.