சோபிதா துலிபாலாவின் அதிரடி முடிவு!

22 மாசி 2025 சனி 14:28 | பார்வைகள் : 208
சோபிதா உடனான திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா நடிப்பில் தண்டேல் படம் வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து நாக சைதன்யாவின் சினிமா கேரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதற்கு மருமகள் சோபிதா வந்த நேரம் தான் என்று நாகர்ஜூனா புகழ்ந்து பேசியது அதிகம் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், திருமணத்திற்கு பிறகு சோபிதா எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, சோபிதா திருமணத்திற்கு முன் உடையில் அதிக அளவு கவர்ச்சி காட்டிய நிலையில், இனி அப்படி இருக்க போவது இல்லை என்றும், அதே போல் யாருடனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளாராம். பாலிவுட் திரையுலகில் போல்டான நாயகியாக பார்க்கப்பட்ட இவரது முடிவு பலரையும் ஆச்சயப்படுத்தி உள்ளது.