Paristamil Navigation Paristamil advert login

■ போதைப்பொருள் கடத்தல் மன்னன் Mohamed Amra.. 9 மாதங்களின் பின்னர் ரொமேனியாவில் கைது!!

■ போதைப்பொருள் கடத்தல் மன்னன் Mohamed Amra.. 9 மாதங்களின் பின்னர் ரொமேனியாவில் கைது!!

23 மாசி 2025 ஞாயிறு 02:05 | பார்வைகள் : 5232


சிறைச்சாலையில் இருந்து தப்பித்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமட் அம்ரா (Mohamed Amra) ஒன்பது மாதங்கள் கழித்து ரொமேனியா நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் மே மாதம் 14 ஆம் திகதி Mohamed Amra, Évreux சிறைச்சாலையில் இருந்து தப்பித்திருந்தார். நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், சுங்கச்சாவடி ஒன்றின் அருகே வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டு, அம்ரா தப்பி ஓடியிருந்தார்.

பின்னர் அவரை தேடும் பணி இடம்பெற்ற நிலையில், பெப்ரவரி 22 ஆம் திகதி ரொமேனியாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்