Paristamil Navigation Paristamil advert login

எங்கிருந்து வந்தது பிரெஞ்சு மொழி??!

எங்கிருந்து வந்தது பிரெஞ்சு மொழி??!

15 புரட்டாசி 2017 வெள்ளி 13:31 | பார்வைகள் : 18532


தமிழ் மொழிபோல் பிரெஞ்சு மொழியும் பல சிறப்புக்கள் கொண்ட செம்மொழி. உலகில் 150 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வமாக பிரெஞ்சு பேசுகிறார்கள். இந்த பிரெஞ்சு மொழி எங்கிருந்து வந்தது??!
 
15 ஆம் நூற்றாண்டில் 3.4 பில்லியன் மக்களால் ஒரு மொழி பேசப்பட்டது. அதன் பெயர் Indo-European. இந்த மொழி ஒரு வரைவிலக்கணம் இல்லாதது. எல்லா பக்கமும் வளையக்கூடிய மொழி. இந்த மொழியில் தான் பிரெஞ்சும் ஒளிந்துகொண்டிருந்தது. 
 
பின்னன் இந்த மொழி, பிரிந்த கூட்டத்தினாலும்.. கண்டங்களினாலும்.. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு உச்சரிப்புக்கு மாறியது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மொழியாக பின்னர் திரிவடைந்தது. 
 
இத்தாலி மொழியாகவும், ரோமன் மொழியாகவும் பிரிந்தது. இதில் இருந்து Oïl எனும் ஒரு மொழி பிறந்தது... அதில் இருந்து பிறந்த குழந்தை தான் பிரெஞ்சு. ஆனால் அப்போது பிறந்த பிரெஞ்சு குழந்தை மிக நேர்த்தியானது. 
 
தனக்கென ஒரு இலக்கணமும், பல சொல்லாடல்களும் கொண்டு நேர்த்தியாக வளர்ந்த பிரெஞ்சு குழந்தையை இன்று 29 நாடுகளில், உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தியுள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியம் மொனாக்கோ, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்... மாலி, கொங்கோ, நைஜர், போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் உத்தியோகபூர்வமாக உரையாடுகிறார்கள். 
 
ஒரு ஆச்சரியமான தகவல் சொல்கிறோம்... பிரான்சை விடவும் ஆபிரிக்காவில் தான் அதிகம்பேர் பிரெஞ்சு பேசுகிறார்கள்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்