■■ Mulhouse : கத்திக்குத்து தாக்குதல்.. ஒருவர் பலி.. இருவர் காயம்!!

22 மாசி 2025 சனி 16:52 | பார்வைகள் : 940
சற்று முன்னர் Mulhouse நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 22, சனிக்கிழமை பிற்பகல் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூடிய சந்தைப்பகுதி ஒன்றில் வைத்து ஆயுததாரி ஒருவர் கத்தியால் கூட்டத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.