Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்

23 மாசி 2025 ஞாயிறு 06:58 | பார்வைகள் : 204


ஐரோப்பாவில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அஜித் கலந்து கொண்ட போது திடீரென கோரிக்கை மற்றொரு கார் வந்ததால் கவிழ்ந்து குட்டிக்கரணம் அடித்த நிலையில் அந்த காரில் இருந்து அஜித் அசால்ட்டாக சிரித்துக்கொண்டே வெளியான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் ஒரு பக்கம் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில், அஜித்தின் அணி மூன்றாவது இடம் பெற்று, நாட்டிற்கே பெருமை சேர்த்தது. இதையடுத்து, மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென அவர் ஓட்டிய காருக்கு குறுக்கே இன்னொரு கார் வந்ததால், நிலை தடுமாறியது. இதனை அடுத்து, அவரது கார் குட்டிக்கரணம் அடித்து கவிழ்ந்த நிலையிலும், அஜித் காரின் உள்ளே இருந்தபடியே சிரித்துக் கொண்டே வெளியே வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்தில், அஜித் எந்தவிதமான காயமும் இன்றி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, அஜித்தின் மேனேஜர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டு, இந்த விபத்தில் அஜித்தின் மீது எந்த தவறும் இல்லை என்றும், குறுக்கே மற்றவரின் கார் வந்ததால்தான் அஜித் கார் கவிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்