ஏழு மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!!

23 மாசி 2025 ஞாயிறு 07:23 | பார்வைகள் : 371
இன்று பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் ஏழு மாவட்டங்களில் வெள்ள அனர்த்த ஏற்படும் என Météo-France தெரிவித்துள்ளது.
Aisne, Ardèche, Calvados, Gard, Hérault, Oise மற்றும் Somme ஆகிய ஏழு மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்துவரும் தொடர் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு 70 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகும் எனவும், அங்கு குறைந்தபட்சமாக 7°C முதல் அதிகபட்சமாக 12°C வரை வெப்பம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.