Paristamil Navigation Paristamil advert login

கண்களால் வார்த்தைகளையும், உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள முடியுமா?

 கண்களால் வார்த்தைகளையும், உணர்வுகளையும் பரிமாறிக் கொள்ள முடியுமா?

23 மாசி 2025 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 196


கண்களை வைத்து நிறைய கவிதைகள் வரைந்துள்ளனர் நமது புலவர்கள். அந்த அளவுக்கு கண்கள், குறிப்பாக பெண்களின் கண்கள் பாடு பொருளாக பன்னெடுங்காலமாக திகழ்ந்து வருகின்றன. அது ஏன் கண்ணிலேயே குறியாய் இருக்காங்கன்னு நமக்குத் தோணலாம்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய முக்கியமான உறுப்புகளாகக் கண்கள் விளங்குகின்றன. காதலின் நுணுக்கங்களை உணர்த்தவும், அந்த காதலின் ஆழத்தையும் வெளிப்படுத்தவும் கண்கள் மிக முக்கியமான ஓர் கருவியாக செயல்படுகின்றன. இதனால்தான் கண்ணைக் குறி வைத்து காதலைக் கவ்விச் செல்கின்றன.. காதல் நெஞ்சங்கள்.

ஒருவரின் கண்கள் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் வார்த்தைகளைக் கூறும் திறன் கண்களுக்கு உண்டு. காதலின் நேர்மையான உணர்வுகள் வார்த்தைகளின் தேவையின்றி கண்களில் பிரதிபலிக்கின்றன. காதலில் இருக்கும் ஒருவரின் கண்களில், அவர்களது பார்வையில் ஓர் இனிமையான காந்த விசை, அதாவது ஈர்ப்பு இருக்கும். அது தன்னுடைய துணையை தேடும்.. தீவிரமாக பார்க்கும். தீராக் காதலுடன் பார்க்கும். அந்த பார்வை, எதிரில் உள்ள நபரின் உள்ளத்தைக் கவரும் விதமாக இருக்கும். உண்மையான காதல் கண்கள் பொய்யை சொல்வதில்லை.

காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது, அவர்களுக்குள் ஒரு அன்பு நிறைந்த பார்வை இருக்கும். அந்த பார்வை, பேச்சுகளுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆழ்ந்த உணர்வை வெளிப்படுத்தும். ஒருவரை நினைத்து பேசும் போது, அவரின் கண்களில் ஒளி இருக்கும். அதை நிச்சயம் நம்மால் உணர முடியும். அந்த ஒளி அவரின் மனதின் ஆர்வத்தையும், காதலின் நேர்மையான தன்மையையும் காட்டும்.

காதலர்கள் பிரியும் போது, அவர்களின் கண்களில் துக்கமும் வலியும் வெளிப்படும். வார்த்தைகள் இல்லாமல் கண்கள் அத்துணை உணர்வுகளை வெளிப்படுத்தும். அமைதியாக இருக்கும்.. சலனம் இல்லாமல் இருக்கும்.. ஏன் கலங்கிப் போயும் கூட இருக்கும். ததும்பி நிற்கும் கண்ணீர் எப்போது வெடித்து வெளியே வருமோ என்று சொல்லும் அளவுக்கு அந்தக் காதல் கண்களில் காணப்படும். 

காதல் வார்த்தைகளில் மட்டுமின்றி கண்களிலும் தெரியும். உண்மையான காதலை புரிந்துகொள்வதற்குத் தேவையான முக்கிய ஊடகம் கண்கள் தான். உண்மையில், "கண்கள் சொல்லும் காதல்" என்பது வார்த்தைகளைக் கூட மீறி செல்லும் ஒரு அற்புதமான உணர்வு!

கண்கள் ஒரு மனிதனின் உள்ளம் பேசும் பிரதான ஊடகமாக விளங்குகின்றன. காதலின் உண்மையான தருணங்கள் வார்த்தைகளில் மட்டுமல்ல, கண்களின் மூலம் வெளிப்படுகின்றன. பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் “காதல் கண்களால் தெரியும்” என்று குறிப்பிடுவதற்குக் காரணம், உணர்ச்சிகளை மிக நேர்மையாக வெளிப்படுத்தும் அற்புதமான கருவியாக கண்கள் விளங்குவதால் தான்.

இதற்கு காரணம் – உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, மனிதன் அதை மறைக்க முடியாது. அப்போது, அவரது கண்கள் அவற்றை தன்னிச்சையாக வெளிப்படுத்தும்.

காதலானவரின் பார்வை எப்போதும் அழகானதொரு மென்மையுடன் இருக்கும். அவர்கள் ஒருவரை பார்த்தால், கண்களில் ஓர் மின்னல் போன்ற ஒளி தெரியும். இந்த ஒளி, அவர்களது மகிழ்ச்சியை, ஆர்வத்தை, பாசத்தை வெளிப்படுத்தும். காதலர் ஒருவரை பார்த்தால், அவரது கண்களில் ஒரு புதிர் இருப்பதை உணரலாம். அந்தப் பார்வை நேரடியாக உள்ளத்தைக் காட்டும் தன்மை உடையதாக இருக்கும். இது, காதலின் ஆழத்தைக் காட்டும்.

காதல் அன்பின் மொழி என்றால், கண்கள் அந்த மொழியின் பிரதான எழுத்துக்கள். ஒருவரை நேசிக்கும்போது, அவரை பார்த்தவுடன் கண்களில் ஓர் இயற்கையான மாறுபாடு ஏற்படும். மகிழ்ச்சி, ஆசை, அன்பு, கவலை ஆகிய உணர்வுகள் கண்களில் பிரதிபலிக்கின்றன.

காதலர்கள் பேசும் போது, ஒருவரின் கண்கள் மற்றொருவரின் கண்களில் பற்றித் தொற்றி நிற்கும். காதலர்கள் இருவர் பேசும்போது சற்று உற்றுப் பாருங்களேன்.. இருவருமே பெரும்பாலும் கண்களைப் பார்த்துதான் பேசுவார்கள். அது கிட்டத்தட்ட ஒரு சென்சார் போல.. அவரது மனதில் இருப்பதை தனது கண்களால் அறியத் துடிக்கும் லாவக முயற்சி இது. இதனால் காதலின் உறுதி உறுதியாகின்றது.

உண்மையான காதல் கொண்டவர்கள், ஒருவர் மற்றொருவரை பார்த்தால், அவர்கள் மனதின் எண்ணங்களை கண்கள் வெளிப்படுத்தும்.
காதலில் பொய் சொல்ல முடியாது, ஏனெனில் கண்கள் உண்மையை வெளிப்படுத்தும்.

காதலின் உண்மையான மொழி வார்த்தைகள் அல்ல, கண்கள். மனதின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் முக்கிய கருவியாக கண்கள் விளங்குகின்றன. காதலை உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்கும் கண்கள் தான் முதன்மையான பாலமாக செயல்படுகின்றன. ஆகவே, காதல் கண்களில் தெரியும் என்பது எப்போதும் உண்மை!
 

வர்த்தக‌ விளம்பரங்கள்