Paristamil Navigation Paristamil advert login

Gare de Lyon விபத்து! - வரலாற்றில் இருந்து...!! - நேற்றைய தொடர்ச்சி!

Gare de Lyon விபத்து! - வரலாற்றில் இருந்து...!! - நேற்றைய தொடர்ச்சி!

14 புரட்டாசி 2017 வியாழன் 16:30 | பார்வைகள் : 18470


தொடரூந்தின் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்த சாரதி Daniel Saulin, கார்-து-லியோன் கட்டுப்பாட்டறைக்கு தகவல் சொல்கிறார். 
 
ஆனால், தகவல் கட்டுப்பாட்டறைக்கு சென்றடையவில்லை. தொடரூந்தையும் நிறுத்த முடியவில்லை. உடனே மீண்டும் அவசர நிலையை சமாளிக்கும் பொருட்டு, அவசர ஒலியை எழுப்புகிறார். அவருடைய இருக்கையை விட்டு பயணிகள் பெட்டிக்குள் நுழைந்து, பயணிகளை தொடரூந்தின் பின் பக்கத்துக்குச் செல்லவும் என எச்சரிக்க முனைகிறார். ஆனால் தொடரூந்தின் வேகத்தை மட்டும் மட்டுப்படுத்த முடியவில்லை. 
 
கார்-து-லியோனில் பயணிகளை இறக்கிவிட்டு வெளிச்செல்வதற்காக மற்றொரு தொடரூந்து காத்திருந்தது. பயணிகள் தொடரூந்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் போது.. அந்த விபரீதம் நிகழ்ந்தது. அதே தண்டவாளத்தில் உச்ச வேகத்தில் வந்த தொடரூந்து, பாரிய சத்தத்துடன் நின்றுகொண்டிருந்த தொடரூந்துடன் மோதியது. தொடரூந்தின் பெட்டிகள் உடைந்து நொருங்கியது. பயணிகள் சிதறி ஓடினார்கள். 
 
இந்த நூற்றாண்டு எதிர்கொண்ட மிகப்பெரும் தொடரூந்து விபத்தாக இது பதிவானது. விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர். 57 பேர் காயமடைந்தனர். நின்றுகொண்டிருந்த தொடரூந்தின் சாரதி André Tanguy விபத்தில் பலியாக, வந்து மோதிய தொடரூந்தின் சாரதி Daniel Saulin உயிர்பிழைத்தார். 
 
கார்-து-லியோன் நிலையத்தில் இரத்தக்கறை படிந்தது. 
 
அதன் பின்னர், பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.. Daniel Saulin கைது செய்யப்பட்டார். SNCF சங்கம் வாதாடியது... Daniel Saulin விபத்துக்கு பலிகடா ஆக்கியுள்ளது என குற்றம் சாட்டியது.  Saulin ஆறு மாதத்தில் விடுவிக்கப்பட்டார். அவசர காலத்தின் போது துரிதமாக பயணிகளை வெளியேற்றவில்லை என கார்-து-லியோன் மேற்பார்வையாளரை கைது செய்தது காவல்துறை... பின்னர் அவரும் விடுவிக்கப்பட்டார். National Geographic தொலைக்காட்சி இந்த விபத்தை ஆவணப்படமாக தயாரித்தது. இன்னபிற சம்பவங்களோடு... கார்-து-லியோன் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்