இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது ஏன்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேள்வி

23 மாசி 2025 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 156
மினி உலக கிண்ண கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
அதாவது, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு ஐசிசி உரிய விளக்க அளிக்க வேண்டும், இந்தியா தனது போட்டிகளை பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பதால் அவர்களது தேசிய கீதம் எப்படி தவறாக இசைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு உரிய விளக்கம் தேவை என ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதுடன் இதுதொடர்பில் கடிதம் ஒன்றையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.