பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்…

23 மாசி 2025 ஞாயிறு 11:17 | பார்வைகள் : 140
பிரித்தானியாவில் இசா சகோதரர்கள் மிகப்பெரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் திட்டங்களில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மொஹ்சின் மற்றும் ஸுபெர் ஆகிய இசா சகோதரரர்கள் பிரித்தானியாவில் EG குழுவின் இணை நிறுவனர்கள் ஆவர்.
இவர்களின் திட்டங்களில் ஒன்று பிரித்தானியாவில் மிகப்பெரிய இஸ்லாமிய கல்லறையை அமைப்பதாகும்.
Lancashireயின் பிளாக்பர்னுக்கு மேற்கே உள்ள Oswaldtwistle அருகில் உள்ள நிலத்தில் இவர்கள் இந்த கல்லறையை கட்ட உள்ளனர்.
இது தற்போதைய மிகப்பெரிய இஸ்லாம் கல்லறையான கிழக்கு லண்டனில் உள்ள கார்டன்ஸ் ஆஃப் பீஸை விட பெரியதாக இருக்கும். இது 21.5 ஏக்கரில் 10,000 பிளாட்களைக் கொண்டது. இந்த பகுதியில் 10,815 மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் கோடீஸ்வர சகோதரர்கள் இந்தப் பணியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதற்கு காரணம் அங்குள்ள குடியிருப்பாளர்கள் இந்த திட்டங்கள் சுற்றியுள்ள நிலப்பரப்பை அழிக்கும் என்று கூறுகின்றனர்.
உள்ளூர் கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், பசுமைப் பட்டை நிலத்தின் தாக்கம் குறித்து கவலைகள் இருப்பதால், இசா சகோதரர்களின் திட்டங்களுக்கு 1000க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் உள்ளன என்றார்.
மேலும், ஆர்வலர்கள் சமர்ப்பித்த புதிய ஆவணங்களில், கல்லறை நிலப்பரப்பை அழிக்கும் மற்றும் வெள்ள அபாயங்களை அதிகரிக்கும் என்பதால் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கூறப்பட்டுள்ளது.