இலங்கையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

23 மாசி 2025 ஞாயிறு 13:15 | பார்வைகள் : 459
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.