Gare de Lyon விபத்து! - வரலாற்றில் இருந்து...!!
13 புரட்டாசி 2017 புதன் 13:30 | பார்வைகள் : 19507
பிரான்சில் இடம்பெற்ற மிகப்பெரிய தொடரூந்து விபத்தாக இது கருதப்படுகிறது. Gare de Lyon நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தொடரூந்தின் பின்னால் மற்றொரு தொடரூந்து வந்து மோதியது!!
ஜூன் மாதம், 22 ஆம் திகதி, 1988 ஆம் ஆண்டு. Seine-et-Marne இன் Melun நகரில் இருந்து Class Z 5300 தொடரூந்து உச்ச வேகத்தில் வந்துகொண்டிருந்தது. மொத்தம் 50 கிலோமீட்டர்கள் பயணம். தொடரூந்து Le Vert de Maisons நிலையத்தில் நிறுத்தப்படுவதற்கான பிரேக் அழுத்தப்பட்டது. ஆனால் தொடரூந்து நிற்கவில்லை. கார்-து-லியோன் நிலையத்துக்கு இன்னும் 10 கிலோமீட்டர்களே மிச்சம் இருந்தது.
தொடரூந்து சாரதி Daniel Saulin ஒருவழியாக எழுந்து நின்று அவசர பிரேக்கினை அழுத்தி தொடரூந்தை நிறுத்தினார். பயணிகள் பலர் அப்போது தொடரூந்தை விட்டு இறங்கியிருந்தனர். மீதமிருந்த பயணிகள் தங்கள் பயணத்தை கார்-து-லியோன் வரை தொடர இருந்தனர்.
பிரேக் வேலை செய்யவில்லை என்றதும், சாரதி Daniel Saulin, மற்றும் அவரது உதவியாளர் Guard Jean Charles Bovée இருவரும் இணைந்து அதை சரிசெய்தனர். பிரேக் வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொண்ட இருவரும், 26 நிமிடங்களுக்கு பின்னர் Le Vert de Maisons நிலையத்தில் இருந்து தொடரூந்தை கிளப்பினார்கள்.
Maisons-Alfort நிலையத்தை தொடரூந்து கடந்தது. கார்-து-லியோனுக்கு அருகே வந்ததும், Daniel Saulin, மஞ்சள் நிற மின்விளக்கை ஒளிரச்செய்கிறார். அவருக்கு கார்-து-லியோன் கட்டுப்பாட்டறையில் இருந்து தகவல் வருகிறது... தொடரூந்தை மெதுவாக்கவும் எனவும், உங்களுக்காக காலியான நடைமேடை தயார் செய்யப்படுகிறது !' என கட்டளை வருகிறது.
ஆனால், மீண்டும் தொடரூந்தின் பிரேக் வேலை செய்யவில்லை என்பதை சாரதி Daniel Saulin உணர்கிறார். உடனே துரித கதியில் செயற்பட்டு.. விஷயத்தை கார்-து-லியோன் நிலையத்துக்கு தெரிவிக்க முனைகிறார்... ஆனால் அது பயனளிக்கவில்லை!!
நாளை..!!