மாபெரும் வெற்றி - எமானுல் மக்ரோன்!!

23 மாசி 2025 ஞாயிறு 12:16 | பார்வைகள் : 1287
பல மாத விசாரணையின் பயனாக மிகவும் ஆபத்தான மொஹமத் அம்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பரிசின் விவசாயக் கண்காட்சியில் இருந்தபடியே. «இந்தக் கைது பிரான்சின் மாபெரும் வெற்றி» எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ (Bruno Retailleau)
«பல மாதங்களான விசாரணையின் பயனாக இந்தக் கைது நடந்துள்ளது. இந்தக் கைதில் ஈடுபட்ட படையினரை வாழ்த்துவதுடன், ருமேனியாவின் பெரும் ஒத்துழைப்பிற்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளளேன். இந்த விசாரணைகளின் படி நிலைகள் எனக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இதற்காக உபயோகிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் முயற்சிகள் நீங்கள் நம்ப முடியாத அளிவிற்கு அசாத்தியமாக இருந்துள்ளது»
எனப் பாராட்டி உள்ளார்.