அல்ஜீரியாவின் தவறு - நேரடியாக் குற்றம் சாட்டும் உள்துறை அமைச்சர்!!

23 மாசி 2025 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 1029
முலூசில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலிற்கு அல்ஜீரியாவின் தவறே காரணம் என, பிரான்சின் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ நேரடியாகக் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த 37 வயதுடைய பயங்கரவாதியை, அல்ஜீரியாவிற்குத் திருப்பியனுப்ப எடுத்து பத்து முயற்சிகளும், அல்ஜீரியத் தூதரகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.
இவர் பிரான்சிற்குள் 2014 ஆண்டு வந்துள்ளார். இவரிற்கான அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்ட்டிருந்தது.
2023 ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஹமாசின் பயங்கரவாத் தாக்குதலின் போது, ஹமாசை ஆதரித்து பயங்கரவாதத்திற்குப் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக இவர் கைது செ ய்யப்பட்டு 50 நாட்களின் பின்னர் நாட்டிற்குத் திருப்பியனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டார்.
இவரிற்கான அவசரக்கடவுச் சீட்டுப் பத்திரத்தை வழங்குமாறு பத்துத் தடவைகளிற்கு மேல் அல்ஜீரியத் தூதரகத்தை உள்துறை அமைச்சு விடுத்த கோரிக்கையை, தூதரகம் அலட்சியப்படுத்தியிருந்தது.
90 நாட்களிற்கு மேல் தடுப்பில் வைக்க முடியாது என்பதால், இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனாலேயே முலூசில் இந்தப் பயங்கவாதத் தாக்குதல் நடந்துள்ளது என உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திலிருந்தே அல்ஜீரியாவைக் குற்றம் சாட்டியிருந்தார்.