Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்து சுற்றுலா துறையில் பாரிய மாற்றம்

சுவிட்சர்லாந்து சுற்றுலா துறையில் பாரிய மாற்றம்

23 மாசி 2025 ஞாயிறு 13:52 | பார்வைகள் : 304


சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துக்கு இணையாக மீண்டும் திரும்பியுள்ளதால் சுவிஸ் சுற்றுலா அலுவலகம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு வருகை புரிந்த, ஹொட்டல்களில் ஒரு இரவாவது தங்கிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சுமார் 43 மில்லியன் ஆகும்.

ஜேர்மானியர்களுக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்துக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா செல்பவர்கள் அமெரிக்கர்கள் தானாம்.

அதுவும், 2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, அவர்கள் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், பிரித்தானியா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்