'அமரன்' படத்தில் கமல்ஹாசனை ஏன் நடிக்கவில்லை ?

23 மாசி 2025 ஞாயிறு 14:44 | பார்வைகள் : 185
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான ’அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், "இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் கமல்ஹாசனை நீங்கள் ஏன் நடிக்க வைக்கவில்லை?" என்ற கேள்விக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பதில் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால், அது ’அமரன்’ என்பதும், இந்த படத்தால் ராஜ்குமார் பெரியசாமி மட்டுமின்றி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த ராஜ்குமார் பெரியசாமியிடம் நிருபர், "இந்த படத்தில் கமல்ஹாசனை ஏன் நீங்கள் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிக்க வைக்கவில்லை?" என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஜ்குமார் பெரியசாமி, "கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் பகிர்ந்த ஒரு தனிப்பட்ட தகவலை இப்போது நான் உங்களுக்காக சொல்கிறேன். கடந்த 2019ஆம் ஆண்டு, இந்த படம் குறித்து ஒரு ஐடியாவை நான் கமல்ஹாசன் இடம் ஆலோசனை செய்தேன். அப்போது அவர் இப்படத்தின் தயாரிப்பாளர் கூட இல்லை. ஆனால், கதையை கேட்டவுடன், ‘இது ரொம்ப எமோஷனல் ஆக இருக்கிறது. ஒருவேளை நான் 30 வயதாக இருந்திருந்தால், இந்த படத்தில் நானே நடித்திருப்பேன்!’ என்று கூறினார்" என தெரிவித்தார்.