Zoufftgen தொடரூந்து விபத்து! - சில தகவல்கள்!!
12 புரட்டாசி 2017 செவ்வாய் 17:30 | பார்வைகள் : 18724
தொடரூந்து விபத்துக்கள் பிரான்சை பொறுத்தவரை மிக சொற்பமே. இருந்தாலும் சில விபத்துக்கள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் Zoufftgen விபத்து!!
Moselle மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் Zoufftgen. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்து இடம்பெற்ற இடம் பிரான்சின் எல்லை. தடுக்கி விழுந்தால் லக்ஸம்பேர்க்.. 20 மீட்டர்கள் தூரத்தில்!!
ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு தொடரூந்துகள் எதிர் எதிரே மோதுப்பட்டு விபத்துக்குள்ளானது.
இரண்டு வழிகள் உள்ள தண்டவாளம் பராமரிப்பு பணிகளுக்காக அன்று தடைப்பட்டிருந்தது. Metz - Luxembourg தொடரூந்துகள் எதிர் எதிரே வந்து மோதுப்பட்டன. இந்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரு தொடரூந்துகளின் சாரதிகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் இருவர் லக்ஸம்பேர்க்கையும், நால்வர் பிரான்சையும் சேர்ந்தவர்கள். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு முன்னதாக பிரான்சில் 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரூந்து விபத்தே நேருக்கு நேர் மோதுப்பட்ட விபத்தாகும். அதில் 35 பேர் இறந்தினருந்தனர். அதன் பின்னர் இடம்பெற்ற விபத்து இதுவாகும்.
இது தவிர, பிரான்சில் இடம்பெற்ற மிக முக்கியமான தொடரூந்து விபத்து ஒன்று உள்ளது...! கார்-து-லியோன் தொடரூந்து நிலையத்தில் இடம்பெற்ற அந்த விபத்து..
நாளை!!