வாஷிங்டன் பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்!!

24 மாசி 2025 திங்கள் 08:20 | பார்வைகள் : 542
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று பெப்ரவரி 24 ஆம் திகதி திங்கட்கிழமை வாஷிங்டன் பயணமாகிறார்.
உக்ரேன் யுத்தம் தொடர்பில் கலந்துரையாடவும், அங்கு நிலையான ஒரு அமைதியை தோற்றுவிக்குமான ஒரு சந்திப்பு, இன்று ஜனாதிபதி மக்ரோனுக்கும் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே இடம்பெற உள்ளது. இரஷ்யா உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தை நிரந்தரமாக பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு இன்று இடம்பெறுகிறது. இதற்காக ஜனாதிபதி மக்ரோன் இன்று பிரெஞ்சு குடியரசு விமானத்தில் வாஷிங்டன் பயணமாகிறார்.