Paristamil Navigation Paristamil advert login

மாகாண முதல்வர் Valérie Pécresse - ஒரு அறிமுகம்!!

மாகாண முதல்வர் Valérie Pécresse - ஒரு அறிமுகம்!!

11 புரட்டாசி 2017 திங்கள் 17:33 | பார்வைகள் : 18478


நவிக்கோ அட்டையின் விலையை அதிகரித்துவிட்டார்களாம் என்று செய்தி வந்தால்... அங்கு Valérie Pécresse எனும் பெயரும் அடிபடும்! அரசியல் துறையில் பல்வேறு பதவிகளையும்.. பொறுப்புக்களையும் வகித்த Valérie Pécresse குறித்து சில தகவல்கள் உங்களுக்காக!!
 
1967 ஆம் ஆண்டு  Hauts-de-Seine இன் Neuilly-sur-Seine இல் பிறந்த இவருக்கு பிரெஞ்சு, ஆங்கிலம், ரஷ்ய மற்றும் ஜப்பானிய மொழிகள் அத்துப்படி!! 1998 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதே இவரின் முதல் அரசியல் பிரவேசம். 
 
2002 ஆம் ஆண்டு Yvelines மாவட்டத்தின்  துணைத்தலைவராக தேர்வானார். பின்னர் இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் ஆனார்.  
 
2007 ஆம் ஆண்டு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக பிரான்சுவா பியோனின் தலைமைக்கு கீழ் நியமிக்கப்பட்டார். 
 
2009 ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் Pécresse, ஆங்கிலத்தில் பிளந்துகட்ட, 'பிரெஞ்சு பேச மறுக்கிறார். பிரெஞ்சை பின் தள்ளுகிறார்!' என Académie de la Carpette anglaise எனும் அமைப்பினர் கொடி பிடித்தனர். 
 
டிசம்பர், 18 ஆம் திகதி,  2015 ஆம் ஆண்டு இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வராக Valérie Pécresse நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து பலதரப்பட்ட நடவடிக்கைகளை, முன்னேற்றங்களை Pécresse செய்து வருகின்றார். 
 
முக்கியமாக, இல்-து-பிரான்ஸ் மாகாணத்தை 'கிராண்ட் பரி' எனும் திட்டத்தின் கீழ் விஸ்தரித்து வருகிறார்கள். போக்குவரத்து பல விதங்களில் விஸ்தரிக்கப்படு வரப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு பின்னால் Pécresse பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். 
 
1967 ஆம் ஆண்டு பிறந்தார் என்று சொன்னோம் இல்லையா... பிரெஞ்சு தேசிய தினத்தின் போது தான் இவர் பிறந்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்