La Courneuve நகருக்கு அனுப்பப்பட்ட 237 கிலோ கொக்கைன்.. மூவர் கைது!

24 மாசி 2025 திங்கள் 10:16 | பார்வைகள் : 1149
Le Havre நகர துறைமுகத்தின் வழியாக கொண்டுவரப்பட்ட 237 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் சுங்கவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில்... பெப்ரவரி 23, நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுகத்தை வந்தடைந்த குறித்த போதைப்பொருள் Gennevilliers (Hauts-de-Seine) நகரில் உள்ள இடம் ஒன்றின் விநியோக முகவரியை கொண்டிருந்ததாகவும், ஆனால் அது உண்மையான முகவரி இல்லை எனவும், குறித்த பொதி La Courneuve (Seine-Saint-Denis) நகரில் உள்ள சேமிப்பகம் ஒன்றுக்கு இந்த பொதி விநியோகிக்கப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 27 வயதுடையவர் எனவும், அவரே குறித்த முகவரிக்கு சொந்தமானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.