முகமாற்று சிகிச்சைமூலம் அடையாளம் மாறிய முகமட் அம்ரா.. !!

24 மாசி 2025 திங்கள் 10:25 | பார்வைகள் : 1390
பிரெஞ்சு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய முகமட் அம்ரா எனும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், ஒன்பது மாதங்களின் பின்னர் ருமேனியாவின் தலைநகர் Bucharest இல் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த ஒன்பது மாதங்களில் அவர், தனது முகத்தில் அழகுச் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அவர் அடையாளம் மாற்றிக்கொண்டுள்ளார். பின்னர் புதிய ருமேனிய கடவுச் சீட்டு ஒன்றின் மூலம் கொலம்பியா தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். அதற்கிடையிலேயே ருமேனிய காவல்துறையினர் பெப்ரவரி 22 ஆம் திகதி அவரைக் கைது செய்தனர்.
பிரான்சில் இருந்து அவர் சென்றவருடம் மே மாதத்தில் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் சுங்கச்சாவடி ஒன்றில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். ஆயுததாரிகளால் சிலர் கவச வாகனம் ஒன்றில் வந்து சிறைச்சாலை வாகனத்துடன் மோதியதுடன், துப்பாக்கிச்சூடும் இடம்பெற்று அவர் தப்பிச் செல்ல சில ஆயுததாரிகள் உதவியிருந்தனர்.
மேற்படி சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டும், மூவர் காயமடைந்துமிருந்தர்.