Paristamil Navigation Paristamil advert login

ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம் !

 ஸ்ரீதேவி   மரணத்தில் தொடரும் மர்மம் !

24 மாசி 2025 திங்கள் 13:09 | பார்வைகள் : 293


80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்துல சினிமா உலகத்தையே தன் கைக்குள்ள வச்சிருந்தவங்க, பல வருஷம் நம்பர் 1 இடத்த விட்டுக்கொடுக்காத அழகு தேவதை ஸ்ரீதேவி. அவங்க இறந்து இப்ப ஏழு வருஷம் ஆச்சு. 2018ல பிப்ரவரி 20ஆம் தேதி நடிகை ஸ்ரீதேவி குடும்பத்தோட கல்யாணத்துல கலந்துக்க துபாய்க்கு போனாங்க. அவங்க புருஷன் போனி கபூர் இந்தியால இருந்தாருன்னு சொல்றாங்க. பிப்ரவரி 24ஆம் தேதி ஸ்ரீதேவிய பாத்து சர்ப்ரைஸ் கொடுக்க ரெடியா இருந்தாராம். ஆனா, ஹோட்டல் பாத்ரூமுக்கு போனவங்க அங்கேயே இறந்துட்டாங்க. பாத் டப்ல மூழ்கி ஸ்ரீதேவி இறந்துட்டாங்கன்னு சொல்றாங்க. ஆனா உண்மையா என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. 

அவங்களுக்கு மாமுஷி விஷம் கொடுத்து கொன்னுட்டாங்கன்னு மறுபடியும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. மாமுஷி விஷம்னா பாம்பு விஷம். நடிகை சாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடியே சாகடிக்க திட்டம் போட்டாங்கன்னு சந்தேகம் வந்துச்சு. ஸ்ரீதேவி சாவ பத்தி கிடைச்ச சாட்சிகள் நிறைய சந்தேகத்த கிளப்பினாலும், ஆச்சரியமா பிரேத பரிசோதனையில அவங்க பாத் டப்ல வழுக்கி விழுந்து இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு பின்னால இருக்கிற ரகசியம் இன்னைக்கும் ரகசியமாவே இருக்கு. 

சொந்த தங்கச்சியையே ஏமாத்திட்டாங்களா ஸ்ரீதேவி? இறுதி சடங்குக்கு ஏன் வரல? யாரு இந்த மர்மமான சகோதரி? உண்மையாவே பாம்பு விஷயம் எப்படி வெளிச்சத்துக்கு வந்துச்சுன்னா, தொழிலதிபர் தீப்தி பின்னிட்டி ஒரு ஷாக்கிங் விஷயத்த சொன்னாங்க. சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ஸ்ரீதேவி சாவு பத்தி தனியா விசாரிச்சுட்டு இருந்தாங்க. ஸ்ரீதேவிய பாம்பு விஷத்தால கொன்னுட்டாங்கன்னு தீப்தி சொன்னாங்க. ஒரு வாரம் முன்னாடியே இத பத்தி பிளான் பண்ணிட்டாங்க. அவங்க சாகுறதுக்கு 5 நாள் முன்னாடி மும்பைலேயே இந்த விஷத்த கொடுத்திருக்காங்க. 

இது கொஞ்சம் கொஞ்சமா உடம்புல இருக்கிற உறுப்புகள டேமேஜ் பண்ணிருக்கு. இந்த விஷம் எங்க இருந்து வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு தெரியும். ஆனா இப்போ சொல்ல முடியாது. தேவைப்பட்டா எல்லாத்தையும் சொல்றேன்னு சொன்னாங்க. ஆனா அந்த நாள் வரவே இல்ல. ஏன்னா எல்லாம் மூடி மறைச்சிட்டாங்க. பிரேத பரிசோதனை கூட குழப்பமாவே முடிஞ்சு போச்சு என தீப்தி கூறின. மொத்தத்துல ஸ்ரீதேவி சாவு இன்னைக்கும் மர்மமாவே இருக்கு. அவங்களுடைய அழகான முகம், அருமையான நடிப்பு, எளிமையான குணத்தினால எல்லார் மனசையும் கொள்ளை அடிச்சாங்க. 

13 வயசுல சினிமாவுக்கு வந்த ஸ்ரீதேவி, தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது உட்பட நிறைய விருதுகள வாங்கி இருக்காங்க. ஸ்ரீதேவி சந்தேகத்துக்கு இடமான முறையில இறந்து அஞ்சு வருஷம் ஆச்சு. இது சாதாரண சாவுன்னு சொன்னாலும், அவங்க சாவோட ரகசியம் இன்னைக்கும் ரகசியமாவே இருக்கு. ஸ்ரீதேவியோட சாவு ரகசியத்த பத்தி நிறைய பேர் நிறைய விதமா பேசிக்கிறாங்க. இது பெரும்பாலும் கொலைன்னு எல்லாரும் சொல்றாங்க. கொலையாளி யாருன்னு கூட பேசிக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னு ஸ்ரீதேவியோடவே எரிஞ்சு சாம்பலா போச்சு.

வர்த்தக‌ விளம்பரங்கள்