அட்லியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி?

24 மாசி 2025 திங்கள் 13:58 | பார்வைகள் : 309
அட்லி தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதி படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிஸியாக இருக்கும் நிலையில், நேற்று தான் அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தார். அதுமட்டுமின்றி, ’ஏஸ்’, ‘டிரையின்’ உட்பட மூன்று படங்களில் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக, அவர் அட்லி தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ’சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாகவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் முழு படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனமும் இன்னொரு பெரிய நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.