'வாடிவாசல்' பற்றிய தகவலை வெளியிடுகிறாரா சூர்யா?

24 மாசி 2025 திங்கள் 14:00 | பார்வைகள் : 234
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "ரெட்ரோ; படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது, இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியான "கண்ணாடி பூவே" என்ற சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, இன்னொரு பாடல் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த பாடல், அனேகமாக ஸ்ரேயா நடனம் ஆடிய பாடலாக இருக்கலாம்.
மேலும், இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கான பணிகளும் தொடங்கி விட்டன. இந்த விழா, நேரு ஸ்டேடியத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் "ரெட்ரோ’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. அதே நேரத்தில், படத்திலுள்ள அனைத்து பாடல்களும் மேடையில் பாடப்படும் என்றும் இந்த விழாவை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் நாயகன் சூர்யா, தனது அடுத்த படமான "வாடிவாசல்" பற்றிய முக்கிய அப்டேட்டை அறிவிக்கலாம் என்றும், குறிப்பாக, படப்பிடிப்பு தொடங்கும் தேதியை அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படத்தில், ஜெயராம், பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் "வாடிவாசல்" படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.