Paristamil Navigation Paristamil advert login

19 ஆம் நூற்றாண்டின் வாழ்வை பிரதிபலிக்கும் - À la recherche du temps perdu!

19 ஆம் நூற்றாண்டின் வாழ்வை பிரதிபலிக்கும் -  À la recherche du temps perdu!

8 புரட்டாசி 2017 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18884


இது நாவல். பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான நாவல். பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் நாவலும் கூட. 
 
ஒரு நாட்டின் வரலாற்றை புத்தகங்கள் தான் சரியாக கடத்தும் என சொல்வதுண்டு. திரைப்படங்கள் நுழையாத 19 ஆம் நுற்றாண்டின் ஆரம்ப பகுதியை, பிரான்சின் வாழ்க்கை கலை கலாச்சாரங்களை அத்தனை அச்சொட்டாக பிரதிபலித்ததாலேயே இந்த நாவல் தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. 
 
 À la recherche du temps perdu - இந்த நாவலை எழுதியவர் Marcel Proust. 1871 ஆம் ஆண்டில் இருந்து 1922 ஆம் ஆண்டு வரை இந்த நாவலை எழுதினார். நாவலின் தலைப்பே அது எது குறித்த நாவல் என்பதை சொல்லிவிடும். எழுத்தாளர் என் சிறு வயது முதல் இறுதி நாட்கள் வரையான வாழ்க்கையில் இடம்பெற்ற பல சுவாரஷ்ய சம்பவங்களை கோர்வையாக கோர்த்து ஏழு பாகங்களாக எழுதினார். 
 
1871 ஆண்டு எழுத ஆரம்பித்திருந்தாலும், 1913 ஆம் ஆண்டு தான் இந்த நாவல் பதிப்புக்கு வந்தது. 1927 ஆம் ஆண்டு வரையான 14 வருடங்கள் இந்த நாவல் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என ஏழு பாகங்களாக வெளிவந்தது. 
 
பின்னர், 1922 ஆம் ஆண்டு இந்த நாவல் ஆங்கிலத்தில் Remembrance of Things Past எனும் பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்திலும் இந்த நாவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 
 
பின்னர் இந்த நாவலை திரைப்படமாக எடுப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான திரைக்கதையை உருவாக்கியதன் பின்னர், அந்த முயற்சி கைவிடப்பட்டது. 
 
பெல்ஜியத்தில் இந்த நாவல் 'கொமிக்ஸ்' (சித்திரக்கதை) ஆக வெளியானது, BBC தொலைக்காட்சியில் 'தொலைக்காட்சி தொடராக' வெளியானது... இதுபோன்று பல பரிமானங்களில் இந்த நாவல் பரவியுள்ளது!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்