முகமட் அம்ரா : மேலும் 15 பேர் கைது!!

24 மாசி 2025 திங்கள் 17:21 | பார்வைகள் : 647
போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமட் அம்ரா கைது ருமேனியாவில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர், பிரான்சில் தொடர் கைது சம்பவம் இடம்பெற்று வருகிறது. முன்னதாக 10 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்த முகமட் அம்ரா, அதன் பின்னர் பல்வேறு வழிகளில் பலரது உதவியுடன் ருமேனியா சென்றடைந்திருந்தார்.
அவருக்கு உதவிசெய்த, தொடர்புடன் இருந்த பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ஸ்பெயினில் ஒருவரும், ருமேனியாவில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 28 பேர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.