இரண்டாயிரம் கிலோ எடையில் சீஸ் உணவு தயாரித்து -- கிண்ணஸ் சாதனை!!

24 மாசி 2025 திங்கள் 19:30 | பார்வைகள் : 637
'fondue ' என அழைக்கப்படும் சீசினால் தயாரிக்கப்படும் உணவு ஒன்றை உருவாக்கி, Jura நகர வெதுப்பகத்தினர் கிண்ணஸ் சாதனை படைத்துள்ளனர்.
2,177 கிலோ எடையுள்ள fondue உணவு தயாரிக்கப்படு, மிக சூடாக பரிமாறப்பட்டது. இதனை கிட்டத்தட்ட 5,000 பேர் உட்கொண்டனர். உலகில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய சூடான fondue உணவு எனும் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
fondue உணவின் பிறப்பிடமான சுவிட்சர்லார்ந்தில் முன்னதாக இதே போன்ற ஒரு மிரம்மாண்ட fondue தயாரிக்கப்பட்டது. 1,440 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட அந்த உணவு, அந்த சந்தர்ப்பத்தில் மிகப்பிரம்மாண்டமானதாகும். ஆனால் அதனை கின்னஸ் அமைப்பினர் ஏற்க மறுத்தனர். அது போதிய சூடாக பரிமாறப்படவில்லை என தெரிவிக்கப்படு சாதனை நிராகரிக்கப்பட்டது.