இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை; புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்

25 மாசி 2025 செவ்வாய் 03:21 | பார்வைகள் : 215
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. அதில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக பட்ஜெட் மார்ச் 14ம் தேதியும், மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது. அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த டிசம்பர் முதல் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதை இறுதி செய்யும் பணிகள் வேகம் பெற்றுள்ளன.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.25) கூடுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடக்கிறது. கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகள் பெறப்பட்டு அதற்கான ஒப்புதல்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.