'வரும் வாரங்களில் போர்நிறுத்தம்!' எதிர்பார்க்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

25 மாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 909
வாஷிங்டன் பயணமாகியுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சந்தித்து உரையாடினார். பின்னர் நேற்று மாலை அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.
அதில் பேசிய ஜனாதிபதி மக்ரோன், "அடுத்து வரும் வாரங்களில் நிரந்தர போர்நிறுத்தத்தை எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டார்.
"ரஷ்யா-உக்ரேன் நாடுகளுக்கிடையே மிக விரைவான அமைதி உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அது உடைந்துபோகாத படி அமைந்திருந்தல் வேண்டும்!" எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா உருவாக்கும் போர் நிறுத்த நடவடிக்கைக்கு உறுதுணையாக பிரான்ஸ் இருக்கும் எனவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.