இதுவரை இல்லாத அளவு மின்சாரக்கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு...??

25 மாசி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 1346
2025 ஆம் ஆண்டு ஜனவரியில் மின்சாரக்கட்டணம் வீழ்ச்சியடைந்திருந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவு கட்டண உயர்வை பிரெஞ்சு மக்கள் சந்திக்க உள்ளனர்.
பிரெஞ்சு மின்சாரவாரியமும் (EDF) அரசாங்கமும் இணைந்து ஒரு புதிய மின்கட்டண அறவீடு திட்டத்தை கொண்டுவர உள்ளன. புதிய கட்டணம் 19% சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால், வீடொன்றுக்கு ஆண்டுக்கு சராசரியாக 250 யூரோக்கள் மேலதிகமாக கட்டணம் செல்லுத்த நேரும்.
ஜனவரி 1, 2026 ஆம் ஆண்டில் இருந்து இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது. முன்னதாக 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மின்கட்டணம் 15% சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.