பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு பயண எச்சரிக்கை

25 மாசி 2025 செவ்வாய் 08:53 | பார்வைகள் : 271
சுற்றுலா விரும்பிகளுக்கு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம்.
பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, கிரீஸ் நாட்டில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படலாம் என்பதால், அது தொடர்பில் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, கிரீஸ் நாட்டிலுள்ள Tempi என்னுமிடத்தில் ஒரு பாரிய ரயில் விபத்து நிகழ்ந்தது.
இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த விபத்தில் 57 பேர் பலியானார்கள், 58க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவ மாணவிகள் ஆவர்.
ஆகவே, அந்த துயர நாளை நினைவுகூரும் வகையில், பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, கிரீஸ் நாட்டில் பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட உள்ளன. எனவே, கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வோருக்கு பயண இடையூறுகள் ஏற்படலாம்.
பிரித்தானியர்களுக்கு கிரீஸ் பயணம் தொடர்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ளது.