Paristamil Navigation Paristamil advert login

ஐசிசி வரலாற்றில் முதல் வீரர்! சதம் விளாசி சாதனை மேல் சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா

ஐசிசி வரலாற்றில் முதல் வீரர்! சதம் விளாசி சாதனை மேல் சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா

25 மாசி 2025 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 166


சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியிலேயே சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான பரபரப்பான 6வது லீக் போட்டி இன்று (பிப்ரவரி 24) ராவல்பிண்டியில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி  முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை குவித்தது.

237 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 240 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் "ஏ" ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், வங்கதேச அணியுடனான இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

237 ஓட்டங்கள் என்ற இலக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரரான வில் யங் டக் அவுட் ஆகி வெளியேற, பின்னர் வந்த கேன் வில்லியம்சன் 5 ஓட்டங்களிலும், கான்வே 30 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க நியூசிலாந்து அணி மிகப்பெரிய தடுமாற்றத்தை ஏதிர்கொண்டது.

இருப்பினும் இக்கட்டான சூழ்நிலையில், டாம் லாதம்  உடன் கைகோர்த்த ரச்சின் ரவீந்திரா திறமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

105 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 112 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

இந்த சதத்தின் மூலம், ரச்சின் ரவீந்திரா உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியின் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் ஐசிசி தொடர்களில் குறைவான போட்டிகளில் 4 சதம் விளாசியதன் மூலம், அதிக சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் 3 சதம் விளாசிய வில்லியம்சனை பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்