Paristamil Navigation Paristamil advert login

பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் யாஷ்!

பி. எஸ். மித்ரன் இயக்கத்தில்  நடிகர் யாஷ்!

25 மாசி 2125 ஞாயிறு 09:46 | பார்வைகள் : 171


நடிகர் யாஷ் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் கடந்த 2008 இல் ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்திருந்த கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 ஆகிய படங்கள் தான் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. 

அதன்படி ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருந்தார் யாஷ். இதைத்தொடர்ந்து இவர், ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோருடன் இணைந்து ராமாயணா எனும் திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். மேலும் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் நடிகர் யாஷ், கார்த்தியின் சர்தார் படத்தை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்