Dunkirk - யுத்தமும் யுத்தம் சார்ந்த இடமும்!!
6 புரட்டாசி 2017 புதன் 12:30 | பார்வைகள் : 18601
பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் Dunkirk. பிரான்சின் எல்லைப்பகுதி நகரமும், பெல்ஜியம் நாட்டில் இருந்து 6 கிலோமீட்டர்கள் தூரம் மாத்திரமே உள்ள நகரம் Dunkirk. இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றால்... உண்டு!!
பிரான்சின் எல்லை நகரமும், பிரித்தானியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் அருகில் இருப்பதாலும், ஆண்டாண்டு காலமாக இந்த நகரத்தில் யுத்தங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருந்தன. 14 ஆம் நூற்றாண்டில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரை தொடர்ச்சியாக யுத்தம்.
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையேயான நூற்றாண்டு கால யுத்தம் இந்த நகரை ஆட்கொண்டிருந்தது. இடம்பெயர்வுகளும், இடிபாடடைந்த கட்டிடங்களும் எப்போதும் யுத்தத்தின் வீரியத்தை பறை சாற்றிக்கொண்டே இருக்கும்.
2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இங்கு 90,000 பேர் தான் வசிக்கின்றனர். பல பெருமைகளை இந்த Dunkirk நகரம் கொண்டிருந்தாலும் 'டன்கிர்க் வெளியேற்றம்' எனும் ஒற்றை வார்த்தை தான் உலகப்பிரசித்தம்.
யுத்தமும் யுத்தம் சார்ந்த இடமுமான டன்கிர்க்கில் இடம்பெற்ற அந்த மகா யுத்த போராட்டத்தைத் தான் கிறிஸ்டோபர் நோலன் மிகப்பெரும் தொகை போட்டு திரைப்படமாக எடுத்தார்.
நாளை..