உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் தீர்மானங்கள்

25 மாசி 2025 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 788
உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.
இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ரஸ்யாவும் அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளன.
பாதுகாப்பு சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை அமெரிக்காவின் இரண்டுநெருங்கிய சகாக்களான பிரிட்டனும் பிரான்சும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.