ஜேசன் சஞ்சயின் முதல் படம் கைவிடப்பட்டதா?

25 மாசி 2025 செவ்வாய் 10:02 | பார்வைகள் : 235
தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். நடிகர் விஜய் ஒரு நடிகராக கலக்கி வருகிறார். அதுபோல விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு இயக்குனராக எப்படி தன்னை நிரூபிக்கப் போகிறார்? என்பதைக் காண பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது.
அதன்படி இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை படமே கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.